Availability: In Stock

Sundarakandam

100.00

சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனவலிமை, தைரியம் மற்றும் தடைகளை நீக்கி, வாழ்வில் மங்களங்களைச் சேர்க்கும். அனுமனின் வீரம், புத்திசாலித்தனம் மற்றும் பக்தி நிறைந்த காவியம் இது. தினமும் படிப்பதால் தீராத துன்பங்கள் நீங்கும், பாவங்கள் போக்கும், வாக்குச் சாதுரியம் மற்றும் செல்வவளம் பெருகும் என நம்பப்படுகிறது.

இராமாயணத்தில் சுந்தரகாண்டத்திற்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள், “சுந்தரகாண்டம் படி, தொல்லை அகலும்” என்று அறிவுறுத்துவார்கள்.

நம் பாரததேசத்தில் ஸ்ரீ இராமர் பிறந்த உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் பேசப்படும் அவதி மொழியில் ஸ்ரீ துளசிதாசர் அவர்கள் எழுதிய இராமச்சரிதமானஸில் உள்ள சுந்தரகாண்டத்தை, அதன் கவிச்சுவை மாறாமல், மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி மொழிபெயர்த்துள்ளார் நூலாசிரியர்தமிழ்செல்வி அழகேசன் அவர்கள்.

இவர் பன்மொழிப் புலமை, பல்துறை அனுபவம் மற்றும் அன்னைத் தமிழ் மீதான தீராத காதலால், இந்த மொழிபெயர்ப்பு பணியை கடவுளின் அருளால் மேற்கொண்டுள்ளார். இவர் முன்னாள் குடியரசு தலைவர் அ க ஒ அப்துல்கலாம் அய்யா அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் கருத்துக்களை ஹிந்தி, தமிழ் மொழிகளில் கவிதை வடிவில் எழுதியும், கவிதை போட்டிகளிலும் பங்கேற்றும் பலபரிசுகளை பெற்றுள்ளார்.

இந்த நூல், பக்தர்களின் உள்ளங்களைத் தொடும் ஒரு ஆன்மீகப் பயணமாக அமைந்து, அனைவருக்கும் பயன் அளிக்கட்டும் என்பதே எங்கள் மனமார்ந்த வாழ்த்து.

வாருங்கள், இந்த ஆன்மீகப் பயணத்தில் இணைவோம்

Category: