Vendru Thaninthathu Kaadu
₹700.00
வாழ்க்கை போராட்டத்தில் இயற்கையை மறந்து போன மனிதர்கள் நாம் இயற்கையையும் இயற்கை நிகழ்வுகளையும் எப்பொழுதும் கேள்வி கேட்பதில்லை ஆனால் அன்று தென்தமிழக மாவட்டங்களில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு ஏன் இந்த பேய்மழை இன்று வானை நோக்கி கெள்வி கேட்க அவர்களுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் அந்த ஒட்டுமொத்த மழையும் அன்று அந்த அடர் இருள் வனத்தில் பிறந்த உடனேயே தாயை இழத்து என்ன செய்வது என்று தெரியாமல் சுதறிக் கொண்டிருந்த தந்தையின் மடியில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தைக்காகத்தான்.
பாய்ந்தோடிவரும் பெருவெள்ளத்தில் தன மகனை காப்பாற்ற தவித்துக்கொண்டிருந்த ஆதவ ராஜாவை அவ்வனத்தின் ஒட்டுமொத்த விலங்குகளும் சூழ்ந்து இந்த பேய் மழை பெருவெள்ளம் இந்த குழத்தைக்காகத்தான். இவன் பிறப்பைக் கண்டு இந்த காடு அஞ்சுகிறது. இப்பொழுது இங்கேயே இவ்வெள்ளத்தில் இவனைக் கொன்று விடுங்கள் என்று கெஞ்சின. யார் அந்த குழந்தை ஓர் பச்சினம் குழந்தையை கண்டு இயற்கையெ அந்த காடே அஞ்சி கொல்ல நினைக்கும் அந்த அந்த உயிர் யார் அக்குழந்தை அவன் செய்த செய்யப்போகும் காரியங்கள் என்ன, அதற்காக தயாராகும் இயற்கையின் கதை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரச வாரிசு கதை நிகழ்கால அரசியல் களத மற்றும் நம்மோடு பேசி உறவாடும் காட்டு விலங்குகள் என மூன்று ஆறுகளாக பாய்ந்தோடி இறுதியில் அருவியாய் உங்களின் என்ன ஓட்டத்தை ஆர்ப்பரித்து கடந்து செல்லும் ஓர் இயற்கையின் கதை இது



