-
-
-
-
-
-
-
-
-
Sundarakandam
₹100.00சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனவலிமை, தைரியம் மற்றும் தடைகளை நீக்கி, வாழ்வில் மங்களங்களைச் சேர்க்கும். அனுமனின் வீரம், புத்திசாலித்தனம் மற்றும் பக்தி நிறைந்த காவியம் இது. தினமும் படிப்பதால் தீராத துன்பங்கள் நீங்கும், பாவங்கள் போக்கும், வாக்குச் சாதுரியம் மற்றும் செல்வவளம் பெருகும் என நம்பப்படுகிறது.
இராமாயணத்தில் சுந்தரகாண்டத்திற்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள், “சுந்தரகாண்டம் படி, தொல்லை அகலும்” என்று அறிவுறுத்துவார்கள்.
நம் பாரததேசத்தில் ஸ்ரீ இராமர் பிறந்த உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் பேசப்படும் அவதி மொழியில் ஸ்ரீ துளசிதாசர் அவர்கள் எழுதிய இராமச்சரிதமானஸில் உள்ள சுந்தரகாண்டத்தை, அதன் கவிச்சுவை மாறாமல், மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி மொழிபெயர்த்துள்ளார் நூலாசிரியர்தமிழ்செல்வி அழகேசன் அவர்கள்.
இவர் பன்மொழிப் புலமை, பல்துறை அனுபவம் மற்றும் அன்னைத் தமிழ் மீதான தீராத காதலால், இந்த மொழிபெயர்ப்பு பணியை கடவுளின் அருளால் மேற்கொண்டுள்ளார். இவர் முன்னாள் குடியரசு தலைவர் அ க ஒ அப்துல்கலாம் அய்யா அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் கருத்துக்களை ஹிந்தி, தமிழ் மொழிகளில் கவிதை வடிவில் எழுதியும், கவிதை போட்டிகளிலும் பங்கேற்றும் பலபரிசுகளை பெற்றுள்ளார்.
இந்த நூல், பக்தர்களின் உள்ளங்களைத் தொடும் ஒரு ஆன்மீகப் பயணமாக அமைந்து, அனைவருக்கும் பயன் அளிக்கட்டும் என்பதே எங்கள் மனமார்ந்த வாழ்த்து.
வாருங்கள், இந்த ஆன்மீகப் பயணத்தில் இணைவோம்
-
-
The Sovereign March
₹499.00This is a book grounded in Thirukkural wisdom that has survived twenty centuries. A framework for those who want to lead themselves using human sovereignty. Built for the person willing to trust themselves.
-
The Search
₹950.00What began as a quest for healing becomes a journey of the soul. In this inspiring blend of spiritual reflection and Reiki wisdom, Kirtida Shah shares her 28-year journey with Tera Mai Reiki, uncovering how energy healing can awaken the light that dwels within every being.
-
Ratha Puthayal
₹300.00இரத்தப் புதையல் -கிரீன்லாந்தின் உறைபனிக்கு அடியில் ஒரு சத்தமில்லாத யுத்தம்.
இதுவரை போதைப்பொருள் கடத்திய சர்வதேச மாஃபியாக்களின் கண்கள் இப்போது ஒரு புதிய புதையல் மீது. எதிர்கால தொழில்நுட்பத்தை ஆளப்போகும் ‘ரேர் எர்த்’ கனிமங்கள்! பசிபிக் கார்டெலின் இளம் தலைவன் ரகசியமாகப் பனியைத் தோண்ட, பழைய உலகத்து தாதாக்கள் விழித்துக்கொள்கிறார்கள்.
இந்தோ-ரஷ்ய சிண்டிகேட்டின் ‘டைகர்’ வாக், தன் மிகச்சிறந்த அடியாளான ருதிரை களமிறக்குகிறார். இன்னொரு பக்கம் இத்தாலியின் மெடிட்டரேனியன் மாஃபியா. அதன் ஆபத்தான மூளை… பேரழகி வலேரியா டிலூகா.
நவீன உலகின் விதிகளே இல்லாத நிழல் உலகப் போர். லண்டன் கிளப்களில் தொடங்கி பனிப்பாலைவனம் வரை நீளும் சதி வலை. மூளைக்கும் மூர்க்கத்துக்கும் இடையிலான ஆட்டத்தில், பனி உடையும்போது ரத்தம் கொட்டும்.
வேகமான சர்வதேச க்ரைம் த்ரில்லர்
-
-
Vendru Thaninthathu Kaadu
₹700.00வாழ்க்கை போராட்டத்தில் இயற்கையை மறந்து போன மனிதர்கள் நாம் இயற்கையையும் இயற்கை நிகழ்வுகளையும் எப்பொழுதும் கேள்வி கேட்பதில்லை ஆனால் அன்று தென்தமிழக மாவட்டங்களில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு ஏன் இந்த பேய்மழை இன்று வானை நோக்கி கெள்வி கேட்க அவர்களுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் அந்த ஒட்டுமொத்த மழையும் அன்று அந்த அடர் இருள் வனத்தில் பிறந்த உடனேயே தாயை இழத்து என்ன செய்வது என்று தெரியாமல் சுதறிக் கொண்டிருந்த தந்தையின் மடியில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தைக்காகத்தான்.
பாய்ந்தோடிவரும் பெருவெள்ளத்தில் தன மகனை காப்பாற்ற தவித்துக்கொண்டிருந்த ஆதவ ராஜாவை அவ்வனத்தின் ஒட்டுமொத்த விலங்குகளும் சூழ்ந்து இந்த பேய் மழை பெருவெள்ளம் இந்த குழத்தைக்காகத்தான். இவன் பிறப்பைக் கண்டு இந்த காடு அஞ்சுகிறது. இப்பொழுது இங்கேயே இவ்வெள்ளத்தில் இவனைக் கொன்று விடுங்கள் என்று கெஞ்சின. யார் அந்த குழந்தை ஓர் பச்சினம் குழந்தையை கண்டு இயற்கையெ அந்த காடே அஞ்சி கொல்ல நினைக்கும் அந்த அந்த உயிர் யார் அக்குழந்தை அவன் செய்த செய்யப்போகும் காரியங்கள் என்ன, அதற்காக தயாராகும் இயற்கையின் கதை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரச வாரிசு கதை நிகழ்கால அரசியல் களத மற்றும் நம்மோடு பேசி உறவாடும் காட்டு விலங்குகள் என மூன்று ஆறுகளாக பாய்ந்தோடி இறுதியில் அருவியாய் உங்களின் என்ன ஓட்டத்தை ஆர்ப்பரித்து கடந்து செல்லும் ஓர் இயற்கையின் கதை இது